ETV Bharat / state

'மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணியில் கேரளாவுக்கு உதவ தயார்' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை கேரள அரசுக்கு வழங்க தமிழ்நாடு வருவாய்த் துறை தயாராக உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார்  மூணார் நிலச்சரிவு  மூணார் நிலச்சரிவு மீட்புப் பணி  munnar rescue operation  rb udhayakumar  ஆர். பி. உதயகுமார்
மூணார் நிலச்சரிவு மீட்புப்பணியில் தமிழ்நாடு உதவத் தயார்
author img

By

Published : Aug 8, 2020, 10:52 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பருவமழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு பாதிப்புள்ள நீலகிரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணியில் தமிழ்நாடு உதவ தயார்

நீலகிரி மாவட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுவருகிறது. மூணாறு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுவருகிறது. மூணாறு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை விரைவில் மீட்க கேரள முதலமைச்சரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகொள் விடுத்துள்ளார்.

கேரள அரசிற்கு தேவையான உதவிகளைச் செய்யும் என உறுதியும் அளித்துள்ளார். மீட்புப் பணிகளில் ஈடுபட வருவாய்த் துறை தயார் நிலையில் உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: இடுக்கி நிலச்சரிவில் சிக்கிய கயத்தாறு தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.