ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களின் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: திருமங்கலம் தொகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்.

தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Apr 17, 2020, 1:47 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும்வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. மேலும், மத்திய அரசு வருகிற 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று திருமங்கலம் தொகுதி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கப்பலூர், மேலக்கோட்டை, ஆலம்பட்டி, அலப்பலச்சேரி, அம்மாபட்டி, சாத்தங்குடி, உரப்பனூர், செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருமங்கலம் நகராட்சியில் தூய்மைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவதற்கு முன்பாக, தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் என அமைச்சர் கூறி அவர்களது காலில் விழுந்து வணங்கினார். இச்சம்பவம் தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: காவல்துறையுடன் பணியாற்றிய வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.