மதுரை மாவட்டம் திருமங்கலம் மெயின் ரோட்டிலுள்ள ஜவகர்புரத்தில் பாண்டியன் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்:
- 'தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியால் செயல்பட முடியுமா? என்று கேள்வி கேட்டவர்கள் மத்தியில், இன்றைக்கு இவரால் தான் இதனை செய்ய முடியும் என்று சொல்ல வைத்துள்ளார்.
- மலுங்கிய வாளை வைத்து சிறப்பாகச் செயல்படுபவர் யார் என்று ஜெயலலிதா தேடும்போது கிடைத்தவர் தான் அமைச்சர் செல்லூர் கே.ராஜு.
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் தான் இந்த மதுரை மாவட்டம் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை பெருமையோடும், ஆதாரத்தோடும் எங்களால் எடுத்துச் சொல்ல முடியும்.
- நிர்வாக காரணங்களால் தான் கூட்டுறவுத்துறை அமைச்சரும், ராஜன் செல்லப்பாவும், நானும் சில விழாக்களில் ஒன்றாகக் கலந்து கொள்ள இயலவில்லை. மற்ற எந்த வித மனக்கசப்பும் கிடையாது.
- எனக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கும் எம்எல்ஏ ராஜன்செல்லப்பாவிற்கு இடையே மனக்கசப்பு இருப்பதாக கருதியவர்கள் நிச்சயமாக ஏமாந்து போவார்கள்.
- நீண்ட நாட்களாக எங்களுக்கிடையே பிரச்னை இருந்து வருவதாக பலர் நினைக்கின்றனர். இருந்தாலும் அதனை அனைத்தையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தேர்தலில் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவோம்.அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்