ETV Bharat / state

ஓஎம்ஜி கண்களோடு பார்க்கிறார் ஸ்டாலின் -ஆர்.பி. உதயகுமார் சாடல் - minister udhayakumar

மதுரை: ஸ்டாலின் எப்போதும் ஓஎம்ஜி கண்களோடு பார்க்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

minister udhayakumar
author img

By

Published : Sep 12, 2019, 9:46 AM IST

Updated : Sep 12, 2019, 10:58 AM IST

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "முதலமைச்சர் பழனிசாமி சாமான்ய முதலமைச்சராக இருந்து சாதனை படைத்து இருக்கிறார். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் பாராட்டுகின்ற வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். காலம் தேர்ந்தெடுத்த தலைவராக முதலமைச்சர் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

இதனிடையே, ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டது குறித்த கேள்விக்கு, "எதிர்க்கட்சித் தலைவர் எல்லாவற்றையும் ஓஎம்ஜி (oh my God - அடக் கடவுளே!) கண்களால் பார்க்கிறார். வெள்ளைப் பார்வையாக பார்ப்பதில்லை, அந்தக் கண்ணோட்டத்தை அவர் விட்டுவிட்டால் நிச்சயமாக முதலமைச்சரை வரவேற்பார்" என பதில் அளித்தார்.

மேலும், டிடிவி தினகரன் கூறியது வஞ்சப் புகழ்ச்சி அணி எனச் சொன்ன ஆர்.பி. உதயகுமார், ஒருவேளை நல்ல எண்ணத்தோடு கூறியிருந்தால் வரலாறு அதனை வரவேற்கும் என்றார்.

Intro:அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டிBody:டி டி வி தினகரன் வஞ்சப்புகழ்ச்சி செய்கிறார் : அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டிConclusion:டி டி வி தினகரன் வஞ்சப்புகழ்ச்சி செய்கிறார் : அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்
பி உதயகுமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமான்ய முதல்வராக இருந்து சாதனை படைத்து இருக்கிறார் .வெளிநாட்டில் வாழும் சாதனை தமிழர்கள் எல்லாம் பாராட்டு கிற வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளது பற்றி ?

எதிர்கட்சி தலைவர் எல்லாவற்றையும் ஓ எம் ஜி(oh my God) கண்களால் பார்க்கிறார் .அந்த கண்ணோட்டத்தை அவர் விட்டு விட்டால் நிச்சயமாக முதல்வரை வரவேற்பார் .

ஒன்பதாவது அதிசயம் என டி டிவி தினகரன் தங்களை புகழ்ந்து உள்ளது பற்றி?

அது வஞ்சப் புகழ்ச்சி அணி.ஒரு வேளை நல்ல எண்ணத்தோடு கூறி இருந்தால் வரலாறு அதனை வரவேற்கும் .

தகவல் தொழில் நுட்ப துறையில் முதலீடு பற்றி ?

ஒட்டு மொத்தமாக அனைத்து துறைகளுக்கான முதலீட்டை பெற்று வந்துள்ளோம் .சான் பிரான்சிஸ்கோ வில் தகவல் தொழில் நுட்பத் திற்கான பிரத்யேக முதலீடு வர உள்ளது.

உலக அளவில் இந்திய பொருளாதர மந்த நிலை தமிழகத்தின் மீதான முதலீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை குறித்து ?

இதற்கும் அதற்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை .தொலை நோக்கு திட்டத்தோடு இப்பணிகள் தொடரும் .

மதுரைக்கு ஏதாவது திட்டங்கள் உண்டா?

மதுரையை பொருத்தவரை தகவல் தொழில் நுட்ப பூங்காவை விரிவுபடுத்தி செயல்பட வைத்திட ஒற்றை சாளர முறையில் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்போம் . நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முதல்வரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் .

எம் ஜி ஆர் ஜெயலலிதா புகழை மறைத்து எடப்பாடி புகழ் பாடப் படுவதாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி ?
அவர்கள் காட்டிய வழியில் தான் எடப்பாடி செயல்படுகிறார் .அவர்களது புகழை மறைத்து அல்ல .காலம் தேர்ந்தெடுத்த தலைவராக முதல்வர் இருக்கிறார் என்றார் .
Last Updated : Sep 12, 2019, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.