நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகரில் தன்னிறைவுத்திட்டத்தின்கீழ் அமைய உள்ள புதிய மீன்பிடித் துறைமுகம், நாகூர் அடுத்த பட்டினம்சேரியில் வெட்டாற்றில் சுவர் அமைத்து, முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், 'வேளாண் திருத்தச் சட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளைப் பாதிக்காது. தமிழ்நாடு அரசு, விவசாயிகளை சிரமத்தைச் சந்திக்க அனுமதிக்காது' என்று தெரிவித்தார். இதற்கிடையே ஆ.ராசா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அமைச்சர் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தருவது திராவிடக் கட்சிகளுக்கு கடைசிக் காலம் என்ற சத்தியநாராயணன் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'யார் வேண்டுமானாலும் கனவு காணலாம், ஆசைப்படலாம், அனைவருக்கும் பேச்சு உரிமை உண்டு' எனக் கூறினார்.
இதையும் படிங்க: உதயநிதி விண்ணில் பறந்து பரப்புரை செய்தாலும் திமுகவுக்கு மாற்றம் கிடைக்காது - ஓ.எஸ். மணியன்