மதுரை : கரோனா தடுப்பூசி முகாமை பத்திர பதிவுத் துறை, வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், 'மதுரை மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டு தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது.
எப்பொழுதெல்லாம் ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசி வருகிறதோ, அவை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் தடையின்றி வழங்கப்படுகிறது. கரோனா தொற்று மதுரையில் ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. தற்போது 35-க்கும் குறைவாக மாறியுள்ளது. உயிரிழப்பே இல்லை என்ற நிலையை அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உருவாக்கியுள்ளோம்.
திடீர் ஆய்வு
பத்திர பதிவுத்துறையில் சார்பதிவாளருக்கு தெரிவிக்காமல் திடீர் ஆய்வு செய்து துறையின் அரசுச் செயலாளர், பதிவுத் துறையின் ஐஜி, துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக ஆய்வு செய்து வருகிறேன்.
தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அன் அப்ரூவல் இல்லாத இடங்களைப் பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளேன்.
டோக்கன் சிஸ்டம்
முறையாக டோக்கன் சிஸ்டம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் சில குளறுபடிகள் இருக்கின்றன. அதையெல்லாம் சரி செய்து தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டியும் அதனை செய்யாதவர்கள் மீது பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தவறு செய்பவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பத்திரப் பதிவுத் துறையில் பணிகள் அலுவலர்கள், அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
போலி பில்
இதையும் படிங்க:
’8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் காணவில்லை’ - அதிமுக மீது குறிஞ்சி சிவக்குமார் புகார்