ETV Bharat / state

நீதிமன்றம் உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்...? நீதிபதிகள் கேள்வி..! - சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலையை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் சீரமைக்காதது ஏன்..? என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 26, 2022, 7:44 PM IST

மதுரை: வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், அதன் சாலையை சீரமைக்கவும் ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் மதுரை ஐயர்பங்களாவைச் சேர்ந்த கோவிந்தன், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம் மழையை நம்பித்தான் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் வேளாங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.

இதனால், மழை நேரங்களில் தண்ணீர் இந்த கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது. கண்மாயில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அதனடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதியும் வேளாண்குளம் கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், பெரிய கோட்டையில் இருந்து முத்தனேந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விலக்கில் இருந்து சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது இதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே, வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களிலுள்ள சீமை கருவேலங்களை அகற்றியும், விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கால்வாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும், சாலையை சீரமைக்கைவும் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் அதிகாரிகள் அதனை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், சாலையை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கேள்வி எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக மனுதாரர் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், சாலையை சீரமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: முடிவற்ற மேல்முறையீடுகளால் உச்ச நீதிமன்றத்தின் சுமையை அரசு நிறுத்த வேண்டும் - அட்டர்னி ஜெனரல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.