மதுரையில் உயிரினங்கள் அனைத்துக்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமாள் படியளக்கும் லீலையான அஷ்டமி சப்பரம் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் சார்பாக, மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், சுவாமி மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு கீழ வெளி வீதி, தெற்கு வெளி வீதி, மேல வெளி வீதி, வடக்கு வெளி வீதி என நான்கு வீதிகளிலும் சப்பரம் பவனி வந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ஹர ஹர சங்கர, ஹர ஹர மகாதேவா' என்ற கோஷத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க: விவசாயிகளுக்கு லாபம் ஈட்டும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி!