உலகப்புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருக்கல்யாணம் சட்டத்தேர், சுவாமி புறப்பாடு காலங்களில் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
வரும் ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா 25ஆம் தேதிவரை கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். 12 நாள்கள் நடைபெறும் கோயில் திருவிழா தொடர்பாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம் குறித்து அட்டவணையையும் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 2 30 மணிவரை கோயிலில் அமைந்துள்ள பழைய திருமண மண்டபத்தில் திருமணக் கோலத்தில் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடியின் வேண்டுதலை மீனாட்சி அம்மன் நிறைவேற்றமாட்டார் - நடிகை ரோகிணி