ETV Bharat / state

நேரலையில் மீனாட்சி திருக்கல்யாணம் ஒளிபரப்பாகும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு - meenakshi chithirai festival live telecast

மதுரை: பக்தர்களின் ஆத்ம திருப்திக்காக மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வருகின்ற மே 4ஆம் தேதி நடைபெறும் என்றும், சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்று நடத்தி வைக்கும் இக்கல்யாணமானது கோயில் இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் என்று அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்
author img

By

Published : Apr 17, 2020, 9:05 PM IST

மதுரை சித்திரைத் திருவிழா நடத்துவது குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், கோவில் இணை ஆணையர் நா.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தற்போது நிலவி வரும் சூழந்லையைக் கருத்திற் கொண்டு சார்வரி வருடம் சித்திரைப் பெருவிழா வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், பக்தர்களின் ஆத்ம திருப்திக்காவும், தலபுராணத்தின்படி, திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும். நித்திய பூஜைகளுடன் சேர்த்து மே 4ஆம் திங்கட்கிழமை காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள எப்பொழுதும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய சேத்தி மண்டபத்தில் (உற்சவர் சன்னதி) நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தி வைப்பார்கள்.

குழுமியிருக்கும் பக்தர்கள்
குழுமியிருக்கும் பக்தர்கள்

மேற்படி நிகழ்வினை அனைத்து பக்தர்களும் கண்டு பிரார்த்திக்கும் வகையில் திருக்கோயில் இணையதளம் www.maduraimeenakshi.org திருக்கல்யாண நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருக்கல்யாண வைபவ உற்சவத்தின்போது 'திருமாங்கல்ய மங்கல நாண்' திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்வதான மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்ள உகந்த நேரம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.