உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் அதற்கு சொந்தமான 11 உப கோயில்களின் உண்டியல் திறப்பு நேற்று (செப். 29) நடைபெற்றது.
மீனாட்சி கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில், உதவி ஆணையர் விஜயன், அறங்காவலர், பிரதிநிதி கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத் துறையின் தெற்கு மற்றும் வடக்கு ஆய்வாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வங்கியாளர்கள் ஆகியோர் உடன் இருக்க உண்டியல் வருமானம் எண்ணப்பட்டது.
இதில், தங்கம் 455 கிராம், வெள்ளி ஒரு கிலோ 155 கிராம் மற்றும் அயல்நாட்டு மதிப்பு ரூபாய் தாள்கள் 33 எண்ணிக்கையுடன் ரொக்கம் மற்றும் சில்லறையாக மொத்தம் உண்டியலிலிருந்து வரப்பெற்ற தொகை ரூபாய் 38 லட்சத்து 32 ஆயிரத்து 557 ஆகும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாய்க்கும் தாரத்திற்கும் கோயில் கட்டிய நபர்!