ETV Bharat / state

பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது! - postmortem

மதுரை: உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டதுபோல் அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Apr 9, 2019, 9:30 PM IST

சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுவதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தடய அறிவியல் நிபுணர்கள் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யபட வேண்டும், ஆனால் தமிழகத்தை பொருத்தவரை மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மருத்துவகல்லூரிகளில் மட்டுமே தடய அறிவியல் நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழக மருத்துவ குறியீடு விதி 621 ன் படி பிரேத பரிசோதனை நடத்தபட்ட அன்றைய தினமே பிரேத பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அல்லாமல் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பிரேத பரிசோதனை செய்துவிட்டு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்ததாக அறிக்கை தருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை, தொடர்புடைய அந்த குற்றவியல் நீதித்துறைக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அனுப்புவதால் காலவிரயம் எற்படுவது மட்டுமல்லாமல், பிரேத பரிசோதனையில் சந்தேகம் ஏற்பட்டு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதுதொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் 2008 பிப்ரவரி 16-ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மருத்துவமனைகள் உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பின்பற்றவில்லை.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என 2008-ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, "நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமற்றது.

சந்தேகத்திற்கு உள்ளாகும் மரணங்கள் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்படும்" என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி அனைத்து  பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமற்றது.

 சந்தேகத்திற்கு உள்ளாகும் மரணங்கள் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்படும்- 
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத்தரப்பில் பதில்.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

 அதில், " தமிழகத்தில் 24 மருத்துவகல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான  பரிசோதனைகள் செய்யபடுகின்றன.

 தடய அறிவியல் நிபுணர்கள் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யபட வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மருத்துவகல்லூரிகளில் மட்டுமே தடய அறிவியல் நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக மருத்துவ குறியீடு விதி 621 ன் படி பிரேத பரிசோதனை நடத்தபட்ட அன்றைய தினமே பிரேத பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிபதிக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பிரேத பரிசோதனை செய்கின்றனர்.ஆனால் மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்ததாக  அறிக்கை தருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையை ஒரு மாதம் கழித்து தொடர்புடைய குற்றவியல் நீதித்துறைக்கு அனுப்புகின்றனர்.இதனால் காலவிரயம், பிரேத பரிசோதனையில் சந்தேகம் ஏற்படுகின்றது.
இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளால் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது.
இது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் 2008 பிப்ரவரி 16 ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பின்பற்றவில்லை.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை 
அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என 2008 ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே,அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.