கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும்விதமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடைவிதித்துள்ளன. இதன் காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகத்தில் செயல்பட்டுவந்த மலர் சந்தையும் தற்காலிகமாக மூடப்பட்டது.
பின்னர், மலர் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு நெல் வணிக வளாகத்தில் செயல்பட்டுவந்த பூச்சந்தையை ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ரேஸ்கோர்ஸ் மைதானம், ஈவேரா நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தற்காலிகமாகச் செயல்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், இங்கு விவசாயிகள் மலர்களைக் கொண்டுவந்து விற்பனை செய்யவும், வணிகர்கள் மலர்களைக் கொள்முதல்செய்து விற்கவும் காலை 6 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், சந்தைக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் நஷ்டத்தில் பூ விவசாயிகள்: இழப்பீடு வழங்க கோரிக்கை!