நாமக்கல்லைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில், "கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கேரளா மாநிலம் அகழி காடு பகுதியில் மாவோயிஸ்ட் மணிவாசகம் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் திருச்சி சிறையில் உள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண திருச்சி சிறை காவலர்கள் அனுமதிக்கவில்லை. எனவே சந்திரா, கலாவிற்கு 30 நாள்கள் பரோல் வழங்கவும் மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண அனுமதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண செல்வதற்கு அவரது மற்றொரு சகோதரி லட்சுமிக்கு கேரள காவல் துறையினர் அனுமதி வழங்க வேண்டும், மேலும் அவரது உடல் அடையாளம் காணப்பட்டால், அவரது உறவினரிடம் ஒப்படைக்க கியூ பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் பரோல் குறித்த வழக்கு நாளை ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:
மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலைப் பெற கேரளா செல்லும் அவரது தங்கை!