ETV Bharat / state

மணிவாசகத்தின் மனைவி, சகோதரிக்கு பரோல் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்! - maoist manivasakam funeral case

மதுரை: மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, அவரது சகோதரி ஆகியோருக்கு பரோல் வழங்குவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறி வழக்கை நாளை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

manivasagam funeral case: parole for wife and sister to be decided later
author img

By

Published : Nov 13, 2019, 9:57 PM IST

நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த செல்ல அன்பரசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 29ஆம் தேதி கேரளாவின் அகழிக்காடு வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார் என மாலை 6:30 மணியளவில் எனக்கு செல்போன் அழைப்பு வந்தது. இறந்தவர் மணிவாசகம்தான் என்பதை உறுதி செய்ய அவரது மனைவியே அடையாளம் காணத் தகுதியானவர். ஆனால், காவல் துறையினர் மணிவாசகத்தை அடையாளம் காட்ட தூரத்து உறவினர்களை அழைத்துள்ளனர். கேரள காவல் துறையினரால் மணிவாசகம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இந்த சூழலில் மணிவாசகத்தின் மனைவி கலா, அவரது சகோதரி சந்திரா ஆகியோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இருவரையும் அனுமதிக்கக் கோரியும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே மனிதநேயத்தின் அடிப்படையில் மணிவாசகத்தின் உடலை அடையாளம் கண்டு உறுதி செய்யவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். மேலும் அவரது இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிவாசகத்தின் உடல் சேலம் வந்த பிறகு அவரின் மனைவி, சகோதரி ஆகியோருக்கு பரோல் வழங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

Intro:மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை,அவரது உறவினர்களுடன் ஒப்படைக்க வேண்டும். உறவினர்களிடம் தேவையற்ற ஆதாரங்களை கேட்டு காலதாமதப்படுத்தக்கூடாது. இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை,அவரது உறவினர்களுடன் ஒப்படைக்க வேண்டும். உறவினர்களிடம் தேவையற்ற ஆதாரங்களை கேட்டு காலதாமதப்படுத்தக்கூடாது. இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நாமக்கல் குமாரபாளையத்தில் செல்ல அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்," கடந்த 29ஆம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார், என மாலை 06.30 மணி அளவில் எனக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. இறந்தவர் மணிவாசகம் தான் என்பதை உறுதி செய்ய தூரத்து உறவினர்களை காவல் துறையினர் அழைத்துள்ளனர். அவரது மனைவியே அவரை அடையாளம் காண தகுதியானவர். கேரள காவல்துறையினரால் மணிவாசகம் சித்திரவை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.  இந்நிலையில் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே மனிதநேயத்தின் அடிப்படையில், மணிவாசகத்தின் உடலை அடையாளம் கண்டு உறுதி செய்யவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் மணிவாசகத்தின் மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோருக்கு 30 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். என கூறியிருந்தார்.

இன்று மனு நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது ..
அப்போது மனுதாரர் வழக்கறிஞர் கூறுகையில், கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது சில உத்தரவுகளை பாலக்காடு நீதிமன்றத்திற்கு பிறப்பித்துள்ளது. சட்டபடி மணிவாசகத்தின், உடலை இறுதி சடங்கு மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளனர். ஆனால் பாலக்காடு போலீசார், மற்றும் மருத்துவமனையில் மணிவாசகத்தின் உறவினர் என்பதற்கான ஆதரங்களை கேட்கின்றனர் . அப்போது தான் உடலை ஒப்படைபோம் என கூறினர் ...
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
மணிவாசகத்தின் உடலை, அவரது உறவினர்களுடன் ஒப்படைக்க வேண்டும். உறவினர்களிடம் தேவையற்ற ஆதாரங்களை கேட்டு காலதாமதப்படுத்தக்கூடாது.
அவரது உடல், கேரளாவில் இருந்து சேலம் வந்தவுடன், சேலம் அரசு மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும்.உடலை பாதுகாக்க சேலம் மாவட்ட எஸ்.பி. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.மேலும் அவர் உடல் சேலம் வந்தவுடன், மணிவாசகத்தின், மனைவி, மற்றும் சகோதரிக்கு பரோல் வழங்குவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர் ..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.