மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 700 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே அலங்காநல்லூர் கிராமத்திற்கு வருகைதந்தனர். வீரர்கள் காளைகளை அடக்குவதை பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.
இளைஞர் உயிரிழந்த சோகம்
இந்நிலையில், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவரும் மாணவர் ஸ்ரீதர் (19) என்பவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையை பங்கேற்க மாட்டின் கழுத்தில் கயிறுகட்டி இழுத்துச் செல்ல நின்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவ்வழியே வந்த மற்றொரு காளை முட்டியதில் வயிற்றில் அவருக்குப் பயங்கர காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரை மேல் சிகிச்சைக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: #Jallikattu2020:தொடங்கியது உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு