சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முழுவதுமாக நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வு எழுதியவர்கள் பள்ளிக்கல்வித்துறை வளாகம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வை எழுதிய தேர்வர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு வெளியே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது உதயராணி, பாஸ்கர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நியமன தேர்வை நடத்தி உள்ளனர். கடந்த பிப்ரவரி மற்றும் ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வு எழுதிய தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான தேர்விற்கு இதுவரை உத்தேச விடை குறைப்பு வெளியிடப்படாமல் இருக்கின்றனர்.
இதையும் படிங்க |
மேலும், 7300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில், 3,192 இடங்கள் மட்டும் நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் பேசும்போது, அக்டோபர் 2023 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 6553-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், ஆனால் தற்போது 2768 காலிப்பணியிடம் மட்டுமே நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
12 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை முழுமையாக தேர்வு எழுதியவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்றும், தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ள 5,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் காலியாக அறிவித்து தேர்வு எழுதிய தங்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.