ETV Bharat / state

மேஜிக் ஷோக்கள் மூலம் வாக்குகளை சேகரிக்கும் திமுக வேட்பாளர்! - மாயாஜால வித்தைகள்

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பிரபல மேஜிஷியன் ராஜேஷ் ஃபெர்ணான்டோ மூலமாக மேஜிக் ஷோக்கள் நடத்தி திமுக வேட்பாளர் சரவணன் வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேஜிக் ஷோ
author img

By

Published : May 9, 2019, 10:43 AM IST

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் தீவிரமாக இயங்கிவருகின்றனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் திமுக வேட்பாளர் சரவணன் பிரபல மேஜிஷியன் ராஜேஷ் ஃபெர்னாண்டோ மூலம் மேஜிக் ஷோக்கள் நடத்தி மக்களிடையே வாக்குகள் சேகரித்து வருகிறார்.

பிரபல மேஜிஷியன் ராஜேஷ் ஃபெர்ணான்டோ

தனது பரப்புரையில் பல்வேறு மாயாஜால வித்தைகள் செய்யும் ராஜேஷ், ஒவ்வொரு வித்தையிலும் தான் ஆதரித்து வாக்கு சேகரிக்கும் சரவணன் மக்களுக்கு எப்படியெல்லாம் தொண்டு செய்வார் என கூறுவதோடு, அந்த வித்தையில் பொதுமக்களை ஈடுபட வைப்பது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

'மேஜிக்' மூலம் வாக்குகள் சேகரிக்கும் திமுக

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் பிரபல மேஜிஷியன் ராஜேஷ் ஃபெர்ணான்டோ மூலமாக மேஜிக் ஷோக்கள் நடத்தி திமுக வாக்குகள் சேகரித்து வருகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தன்னூக்கப் பேச்சாளரும், மேஜிஷியனுமான ராஜேஷ் ஃபெர்ணான்டோ மதுரை திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தனது பிரச்சாரத்தில் பல்வேறு மாயா ஜால வித்தைகள் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஒவ்வொரு வித்தையிலும் தான் ஆதரித்து வாக்குக் கேட்கும் சரவணன் மக்களுக்கு எப்படியெல்லாம் தொண்டு செய்வார் என்பதை விளக்கி வாக்கு சேகரிப்பது மக்களை பெருமளவு ஈர்த்துள்ளது.

அதிலும் கூட்டத்திலுள்ள பெண்களையும் அந்த மேஜிக் வித்தையில் பங்கேற்க வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

ராஜேஷ் ஃபெர்ணான்டோ தனது பல்வேறு மேஜிக் வித்தைகள் மூலமாக 10-க்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(இதற்குரிய வீடியோ இன்று காலை 7 மணியளவில் மோஜோ மூலமாக TN_MDU_01_09_TPK_DMK_MAGICIAN_VOTE_VISUAL_9025391 என்ற பெயரில் தரவேற்றம் செய்துள்ளேன்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.