ETV Bharat / state

விளையாட்டு விபரீதமானதால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு! - தூக்குப்போடுவது எப்படி? என விளையாட்டாக செய்து காட்டிய புதுமாப்பிள்ளை

மதுரை: தூக்குப்போடுவது எப்படி? என விளையாட்டாக செய்து காட்ட அது விபரீதமானதால் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

விளையாட்டு விபரீதமானதால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு!

author img

By

Published : Jan 29, 2020, 5:32 PM IST

மதுரை சோலையழகுபுரம், 1-ஆவது தெருவைச் சேர்ந்த அகமது ஷெரீப்பின் மகன் முகமது அலி(22) லாரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

சந்தோ‌ஷமாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் முகமது அலி, தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நகைச்சுவைக்காக வீட்டிலிருந்த கயிற்றை எடுத்து தூக்குப்போடுவது எப்படி? என மனைவியிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் விளையாட்டாக இதனை முகமது அலி செய்து கொண்டிருந்தபோது நாற்காலி தவறி கீழே விழுந்தது. அப்போது எதிர்பாராத வகையில், முகமது அலியின் கழுத்தில் மாட்டியிருந்த கயிறு இறுக்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி கூக்குரலிடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து முகமது அலியை மீட்டனர்.

விளையாட்டு விபரீதமானதால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு!

உயிருக்கு போராடிய அவரை மீட்டு, உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே முகமது அலி உயிரிழந்தார். விளையாட்டாக செய்த சம்பவத்தால், திருமணமான ஒரு மாதத்திலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...’பயணிகள் தாமதத்திற்கு விமானங்களைக் குறை கூற முடியாது’ - உச்ச நீதிமன்றம்

Intro:*மதுரையில் விளையாட்டு விபரீதமானது - தூக்குப்போடுவது எப்படி? நடத்தி காட்டிய புதுமாப்பிள்ளை பலி*Body:*மதுரையில் விளையாட்டு விபரீதமானது - தூக்குப்போடுவது எப்படி? நடத்தி காட்டிய புதுமாப்பிள்ளை பலி*

மதுரை சோலையழகுபுரம், 1-வது தெருவைச் சேர்ந்தவர் அகமது ஷெரீப், இவரது மகன் முகமது அலி (22) லாரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த 1 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது, சந்தோ‌ஷமாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் முகமது அலி, தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார், அப்போது நகைச்சுவைக்காக வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து தூக்குப்போடுவது எப்படி ? என மனைவியிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்ததாக தெரிகிறது, விளையாட்டாக இதனை முகமது அலி செய்து கொண்டிருந்தபோது நாற்காலி தவறி கீழே விழுந்தது, அப்போது எதிர்பாராத வகையில், முகமது அலி தனது கழுத்தில் மாட்டியிருந்த கயிறு இறுக்கியது. இதனால் அவர் துடித்துள்ளார், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி கூக்குரலிடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து முகமது அலியை மீட்டனர். உயிருக்கு போராடிய அவரை உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர், அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் வழியிலேயே முகமது அலி பரிதாபமாக இறந்தார். விளையாட்டாக செய்த சம்பவத்தால் திருமணமான 1 மாதத்திலேயே புது மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்ளபடுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.