மதுரை மாவட்டம் அவனியாபுரம் அம்பேத்கர் நகர், தந்தை பெரியார் நகரில் உள்ள மூன்று சின்டெக்ஸ் தொட்டிகளில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் நிரப்பப்படவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அவனியாபுரம் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு நிரந்தரமாகத் தண்ணீர் கிடைக்கும் வரை சாலை மறியலைக் கைவிட மாட்டோம் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: போரூரில் காவல் வாகனம் மோதியதில் 4 பேர் காயம்