ETV Bharat / state

ஊரடங்கிலும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியுடன் டியூஷன்: கிராம இளைஞர்களின் கல்விச் சேவை

கரோனா பெருந்தொற்று கால ஊரடங்கின்போதும் கற்றுக்கொண்ட கல்வியை மறந்துவிடாமல் இருக்க குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கி டியூஷன் எடுக்கின்றனர் மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்து இளைஞர்கள். அது குறித்து ஒரு சிறப்புத் தொகுப்பு.

madurai-village-tution-special
madurai-village-tution-special
author img

By

Published : Jul 20, 2021, 4:41 PM IST

மதுரை: ஒத்தக்கடை அருகே உள்ளது காயாம்பட்டி. 200-க்கும் குறைவான குடும்பங்கள் வசிக்கின்ற குக்கிராமம். இவ்வூரில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை பயிலும் சற்றேறக்குறைய 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கரோனா பெருந்தொற்றுக் காலம் என்பதால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

தொலைக்காட்சி, செல்பேசி என குழந்தைகளின் உலகம் வெகுவாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் இதுவரை கற்ற கல்வியை நினைவுக்குக் கொண்டுவரும்விதமாக காயாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மாலை நேர வகுப்பு எடுத்துவருகின்றனர்.

மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்தத் தனிப்பயிற்சி இரவு 9 மணிவரை நீடிக்கிறது. சரியாக ஆறு மணி அளவில் குழந்தைகள் அனைவரும் மிகச் சீராக உடை அணிந்து அலங்காரம் செய்து பள்ளிக்குச் செல்வதுபோல் ஊர் மந்தைக்கு வருகிறார்கள். அங்கே தங்கள் கையோடு கொண்டுவந்த துணி அல்லது சாக்குப் பையை விரித்து அதன் மீது அமர்ந்துகொண்டு பாடப்புத்தகங்களை விரித்துவைத்து வாசிக்கத் தொடங்குகின்றனர்.

குழந்தைகளுக்கு எடுக்கப்படும் பாடம்

முதலாவதாக ஆனா... ஆவனா... பிறகு ஏபிசிடி அதற்குப் பிறகு ஒன்றிலிருந்து 15 வரை வாய்ப்பாடு. ஒரு குழந்தை சொல்ல பிறர் அனைவரும் சத்தமாகத் திரும்பச் சொல்கிறார்கள்.

ஆறு முப்பது மணியிலிருந்து ஏழு முப்பது மணிவரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கும், ஏழு முப்பது மணியிலிருந்து 9 மணிவரை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கும் பிரித்து வகுப்பு எடுக்கின்றனர்.

வகுப்பறை முடியும்போது கொடுக்கப்படும் வீட்டுப் பாடத்தை மறுநாள் குழந்தைகள் தவறாமல் செய்துவிட்டு வர வேண்டும். அதற்குத் திருத்தி மதிப்பெண் அளிக்கிறார்கள் இளைஞர்கள்.

குழந்தைகளின் கல்வித் திறன் மேம்பட டியூசன்

இளங்கலை பொருளாதாரம் பயின்றுவிட்டு தற்போது புகைப்படக்காரராகப் பணியாற்றும் காளிதாசன் இந்த டியூஷனை ஒருங்கிணைப்புச் செய்கிறார். அவர் கூறும்போது, ”தற்போது பள்ளிகள் திறக்கப்படாத காலமாக இருப்பதால் குழந்தைகளின் வாசிப்பு, கல்வித்திறன் குறைந்துகொண்டே-வருகிறது. அதனைச் சரிசெய்வதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

நாங்கள் இந்த டியூஷனை தொடங்கும்போது பெரும்பாலான குழந்தைகள் தங்கள் படிப்பை மறந்துவிட்டார்கள். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் மட்டுமே அந்தப் படிப்பை மிகச் சரியாக நினைவில் வைத்துள்ளார்கள். பிறர் அனைவரும் அவ்வாறு இல்லை.

தற்போது நாங்கள் தொடங்கியுள்ள இந்தத் தனிப்பயிற்சி மூலமாக குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படத் தொடங்கியுள்ளது. இதனை ஊக்குவிப்பதற்காக நாள்தோறும் மொச்சை, உளுந்து, தட்டாம் பயிறு, சுண்டல், பாசிப்பயிறு, கடலைப்பருப்பு என வழங்கிவருகிறோம். வாரத்திற்கு ஒருநாள் முட்டை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளித்துவிடுகிறோம்” என்கிறார்.

குழந்தைகளுக்குச் சிற்றுண்டி

தங்கள் நட்பு வட்டம், தெரிந்தவர்கள் அனைவரிடமும் சிற்றுண்டி வழங்குவதற்கு உதவி பெறுகிறார்கள். சமூக வலைதளங்களின் மூலமாக இந்தச் செய்தியைச் சொல்லி விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக குழந்தைகளுக்குச் சிற்றுண்டி வழங்க ஏற்பாடுசெய்கின்றனர்.

அதுமட்டுமன்றி மந்தையில் வந்து அமர்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் கிருமிநாசினி கொடுத்து கையை நன்றாகக் கழுவச் சொல்கிறார்கள் முகக் கவசம் அணிவதை வலியுறுத்துகிறார்கள்.

மேலும் தகுந்த இடைவெளியோடுதான் அமர வேண்டும் என்பதைக் கண்டிப்புடன் செயல்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும் மற்றொரு ஆசிரியர் கனிமொழி கணேசன், மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.

எதிர்காலம் கருத்தில்கொண்டு இந்த முயற்சி

அவர் இங்கு உள்ள குழந்தைகளுக்கு ஆங்கில இலக்கணப் பயிற்சியை வழங்குகிறார். கனிமொழி கூறும்போது, ”இந்தக் கிராமத்து குழந்தைகளுக்கு கற்ற கல்வி வீண் போகாமல் இருப்பதற்காக ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு இலக்கணப் பயிற்சி ஓரிரு நாள்களாக வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

கல்விச்சூழல் அடுத்த நிலை உருவாகும், ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதைக் கவனத்தில்கொண்டு இந்த முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்கிறார்.

ஊர் மந்தையிலேயே குழந்தைகள் மாணவர்களுக்காக நூலகம் ஒன்றையும் அமைத்துள்ளனர். இங்கு அவர்களுக்குப் படிப்பதற்குத் தேவையான அனைத்துவிதமான நூல்களும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. விரும்பியவற்றை எடுத்து அங்கேயே வாசிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நிபந்தனை. குழந்தைகள் மீது ஆர்வத்தோடு வந்து பகல் நேரங்களில் படித்துவிட்டுச் செல்கிறார்கள்.

மீண்டும் நினைவூட்டிக்கொள்ள நல்ல வாய்ப்பு

மதுரையில் உள்ள ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் ஸ்வேதா கூறுகையில், ”கடந்த ஓராண்டாக கரோனா சூழல் காரணமாக எங்களால் படிக்க இயலாத நிலை இருந்தது. எங்களது கிராமத்திலேயே படித்த இளைஞர்கள் சேர்ந்து எங்களுக்கு டியூசன் எடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

நாங்கள் மறந்துபோன அவற்றை மீண்டும் மீண்டும் நினைவூட்டி கற்றுத் தருகிறார்கள் என்கிறார்.

காயாம்பட்டி கிராம இளைஞர்களின் கல்விச் சேவை

உலகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி பிரியா கூறுகையில், "இந்த மாலை நேரப் பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நாங்கள் படித்த விஷயங்களை மீண்டும் நினைவூட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பாகும்” என்கிறார்.

படித்த இளைஞர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தங்கள் கிராமத்து குழந்தைகளுக்காக மேற்கொள்ளும் இந்தக் கல்வி முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியதாகும். இதேபோன்று அனைத்துக் கிராமங்களிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற கல்விச் சேவை ஆற்ற வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க: ஆடு மேயும் இடமாக மாறிய அரசு பள்ளி வளாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.