ETV Bharat / state

விழுப்புரம் - கச்சக்குடா விரைவு ரயில் வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

விழுப்புரம் - கச்சக்குடா விரைவு ரயில் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

author img

By

Published : Dec 3, 2022, 8:40 PM IST

விழுப்புரம், கச்சக்குடா விரைவு ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்- மதுரை ரயில்வே அறிவிப்பு

மதுரை: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் வாடிப்பட்டி பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) டிசம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து எனவும், மதுரை - கச்சக்குடா வாராந்திர விரைவு ரயில் (07192) டிசம்பர் 7 ஆம் தேதி அன்று மதுரையில் இருந்து 60 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வாடிப்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரை வழக்கம் போல் மதுரையிலிருந்து இயக்கப்படும். அதேபோல மதுரை - கச்சக்குடா விரைவு ரயில் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று மதுரையிலிருந்து வழக்கம் போல காலை 05.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.