மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை பின்புறம் அதிநவீன வசதிகளுடன் ரூ. 1.38 கோடி செலவில் 40 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிறது. கடந்த மார்ச் மாதம் 40 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டட திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கரோனா நோய்த் தொற்றின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 40 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பாக செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள புதிய கட்டடத்தில் ஆக்சிஜன் வசதியுடன் இரண்டு அவசர சிகிச்சை படுக்கை, ஆக்சிஜன் வசதியுடன் 40 அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளுக்கு படுக்கை, எட்டு தற்காலிக படுக்கை என ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.