முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நவராத்திரி உற்சவ விழாவும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை, பத்து நாட்கள் நடைபெற இருந்தது. கரோனாவால் அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கோயிலுக்குள் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். இதில் குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட தேதிகளில் பக்தர்கள் கோயிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை கோயில் ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதி