ETV Bharat / state

வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் குடும்பத்துக்கு அரிவாள் வெட்டு!

மதுரை: திருமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற பெண்ணின் கணவர் உட்பட உறவினர்கள் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

author img

By

Published : Jan 5, 2020, 10:02 PM IST

madurai-thirumangalam-ward-member-family-have-been-attacked-brutally
வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் குடும்பத்துக்கு அரிவாள் வெட்டு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாண்டியம்மாள். இவரது கணவர் ஞானசேகரன் தனது உறவினர்கள் திருமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சென்னையைச் சேர்ந்த சேகர் ஆகியோருடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது மூன்று கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கும்பல், அவர்களை அரிவாள், அம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் படுகாயமடைந்த மூன்று பேர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாண்டியம்மாள் வெற்றி பெற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்தரப்பினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் குடும்பத்துக்கு அரிவாள் வெட்டு!

இதையும் படிங்க: இரு வேட்பாளர்கள் இடையே மோதல்: வெளியான வீடியோ காட்சி!

Intro:*திருமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரை வெற்றி பெற்றவரின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அரிவாள் வெட்டு 15க்கும் மேற்பட்ட கும்பல் கொலைவெறி தாக்குதல்*Body:*திருமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரை வெற்றி பெற்றவரின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அரிவாள் வெட்டு 15க்கும் மேற்பட்ட கும்பல் கொலைவெறி தாக்குதல்*

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர் கணவர் மற்றும் உறவினர்களுக்கு காரில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பிவைக்கப்பட்டனர்

திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாண்டியம்மாள் இவரது கணவர் ஞானசேகரன் உறவினர்கள் திருமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் சென்னையைச் சேர்ந்த சேகர் ஆகியோர் இரவு 8 மணியளவில் அவர்களது வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் அப்போது மூன்று கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் 3 பேரையும் அரிவாள் மற்றும் அம்புகளால் சரமாரியாக தாக்கினர் இதில் படுகாயமடைந்த 3 பேரும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர் மேலும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்தரப்பினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் மேலும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.