மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கர் மன்னரால் கி.பி. 1636 ஆம் ஆண்டு திருமலை நாயக்கர் மகால், மதுரையின் மையப்பகுதியில் கட்டப்பட்டது. தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் திருமலை நாயக்கர் மகால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981ஆம் ஆண்டுமுதல் இங்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஒலி-ஒளி காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று(செப்-27) ஒருநாள் மட்டும் மகாலை இலவசமாகச் சுற்றி பார்க்கலாம். மேலும் ஒலி, ஒளி காட்சி இலவசமாக நடத்தப்படும் என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
1 கேஸ் கொடுத்தா 2 கேஸ் இலவசம் - தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல்!