மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், மேலக்கோட்டையில் உள்ள பாரதியார் நகர், பெரியார் நகர்ப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல், மிகவும் சிரமப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கோரிக்கை வைத்தனர்.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் காவல் துறையியனர் இதன் அடிப்படையில் இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மேலக்கோட்டைப் பகுதியில் வசிக்கும் 110 பட்டியலின குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பினை திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் அருண் வழங்கினார்.மேலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி பொதுமக்களும் சமூக இடைவெளிவிட்டு, வரிசையாக நின்று நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர். காவல் துறையினர் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்ததற்கு பட்டியலின மக்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.இதையும் படிங்க: ஜவுளிக்கடையை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்றவர் கைது