ETV Bharat / state

முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக எம்எல்ஏவிற்கு கரோனா! - Sozhavanthan mla manikkam

மதுரை: முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Madurai Sozhavanthan mla manikkam affected corona

author img

By

Published : Aug 9, 2020, 12:25 PM IST

Updated : Aug 9, 2020, 12:57 PM IST

மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான மாணிக்கத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர், மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் (06-08-2020) மாணிக்கம் பங்குபெற்றார். இவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவ்விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் இவ்விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது‌.

முன்னதாக, மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 9, 2020, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.