ETV Bharat / state

காவலர்களுக்கு கரோனா எதிரொலி: மதுரை தெற்குவாசல் காவல் நிலையம் இடமாற்றம் - Transfer of South Gate B5 Police Station

மதுரை: தெற்கு வாசல் பி5 காவல் நிலைய காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த காவல் நிலையம் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையம் இடமாற்றம்
காவல் நிலையம் இடமாற்றம்
author img

By

Published : Apr 26, 2020, 12:56 PM IST

மதுரை தெற்குவாசல் பகுதியில் பி5 காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் காவலர்கள் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது பி5 காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை தெற்குவாசல் காவல் நிலையம், அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இங்கு 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் பிற காவலர்களுக்கு இதுவரை எந்தவித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

காவல் நிலையம் இடமாற்றம்

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதள ஊடகத்தின் சார்பாக கொண்டுச் சென்ற போது, "அனைத்து காவலர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தேவையான உதவிகள் ஆலோசனைகளும் வழங்கப்படும்" என்று ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.