மதுரை மாவட்டம் ஆனையூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், விகேஎஸ் யோகா, சிலம்பம் ட்ரஸ்ட் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த முயற்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, சிலம்பத்தில் உலக சாதனை முயற்சியாக 30 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் செய்தனர். இந்த சிலம்பப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க: சர்வதேச சிலம்பப் போட்டி; பதக்கம் வென்று சேலம் மாணவர்கள் அசத்தல்!