மதுரை:மதுரையில் நேற்று இரவு கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சரவணன், சிவக்குமார், லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் எதிர்பாராத விதமாகக் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததால் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான வி ஆர் கி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயானந்த், ரமேஷ், லோகநாதன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இரவு நேரத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாமலும், உரிய மேற்பார்வை இன்றியும் பணி செய்ததாலேயே உயிரிழப்பிற்குக் காரணம் என மதுரை மாநகராட்சி இளநிலை பொறியாளர் சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி