ETV Bharat / state

'எனக்கு காச நோய்... சொந்தபந்தம் எல்லாம் கைவிட்டுட்டாங்க' - உதவிக்கரம் நீட்டிய மாணவி நேத்ரா! - மாணவி நேத்ராவின் அன்பான செயல்

மதுரை: காசநோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்த நபருக்கு, சலூன் கடை மோகனின் மகள் நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த பணத்தில் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

nethra
nethra
author img

By

Published : Jun 17, 2020, 6:10 PM IST

ஏழை மக்களுக்கு கரோனா காலத்தில் அரிசி, மளிகைப் பொருள்கள் வாங்கி, உதவி செய்ததால் பிரதமரிடம் பாராட்டுப் பெற்றார், மதுரை சலூன் கடை மோகன். தொழிலாளியாக இருந்தாலும் உதவி செய்வதில் கர்ணனாக இருக்கிறார், மோகன். பெரியோர்களின் பாராட்டுகளுக்காக அவர் உதவவில்லை. அவர் செய்யும் உதவியால் பலதரப்பட்ட மக்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

அதேபோன்று, அவரது மகள் நேத்ராவின் செயலும் மதுரை மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அண்மையில், காசநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு மோகனும் அவரது மகளும் உதவிக்கரம் நீட்டியது நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் காசநோயால் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோயின் காரணமாக, கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறார்.

மனம் ஒத்துழைத்தாலும், உடல் ஒத்துழைக்கும் நிலையில் இல்லை. பிறரது உதவியில்லாமல் தான் இருக்கும் இடத்தை விட்டு, நகர முடியாத சூழலில், வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துள்ளார், முருகேசன். இவருக்குத் திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சலூன் கடை மோகனிடம் உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார், முருகேசன்.

அவர் எழுதிய கடிதத்தைப் பெற்ற சலூன் கடை மோகனின் குடும்பத்தார், முருகேசனை வரவழைக்க ஏற்பாடு செய்து, தங்களது கடையிலேயே வைத்து, தனது குடும்பத்தாருடன் இணைந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலையை முருகேசனின் மருத்துவ செலவிற்காக வழங்கினர்.

காசோலையைப் பெற்ற முருகேசன், கண்ணீர் மல்க மோகன் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, தனது வாழ்வில் பட்ட துயரத்தை எடுத்துரைத்தார்.

முருகேசன் கூறியதாவது, "எனக்கு காசநோய் என்றதும் என்னுடைய சொந்த பந்தங்கள் எல்லோரும் கைவிட்டு விட்டனர். எனது ஊரார்கூட ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்தனர். திருமணமாகி, எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என்னால் வேலை செய்ய இயலாது. கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டதால், யாருடைய உதவி இன்றியும் என்னால் இயங்க முடியாது. மருத்துவத்திற்காகப் பலரிடம் உதவி கேட்டிருந்தேன். எனது கடிதத்தைப் பார்த்துவிட்டு மோகன் குடும்பத்தார், இந்த உதவியை செய்துள்ளனர்" என சோகம் தோய்ந்த கண்களில் வெளிச்சம் பிறந்தது போல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சலூன் கடை மோகன் கூறுகையில், 'இதுவரை ஆயிரத்து 500 பேருக்கு உதவி செய்துள்ளேன். நேற்றும், இன்றும் ஏறக்குறைய 250 பேருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, பலசரக்கு உள்ளிட்டப் பொருள்கள் வாங்கிக் கொடுத்துள்ளேன். இதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள், காவல் துறையினர் உறுதுணையாக உள்ளனர். இந்த உதவியை என்னால் இயன்றவரை முழுவதும் செய்வேன். கடந்த 10 நாட்களுக்கும் முன்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகேசன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் நானே செலவு செய்து, அவரை வரவழைத்து, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினேன். இந்த தொகையில் எனது மகள் நேத்ராவிற்கு வந்த நன்கொடைப்பணம் பெரும்பான்மையாக இருந்தது. அந்தளவு முருகேசனுக்கு உதவி செய்ய, எனது மகள் நேத்ராவும் பக்கபலமாக இருந்தார்' என்றார்.

தந்தையின் செயலை உச்சிமுகர பாராட்டும் மனதோடு மாணவி நேத்ரா கூறியதாவது, 'எனது அப்பாவின் நல்லெண்ண செயல்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்' எனத் தெரிவித்தார்.

நேத்ரா தனக்கு நன்கொடையாக வந்த பணத்திலிருந்து, கால்கள் செயலிழந்த நபருக்கு, தன் தந்தையின் மூலம் பண உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இ-பாஸ் இல்லாமல் நாமக்கல் வந்தால் கைது - ஆட்சியர் எச்சரிக்கை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.