மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும், ரயில்வே மருத்துவமனை மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு நேர் எதிரே செயல்பட்டு வருகிறது.
ரயில்வே ஊழியர்களின் மருத்துவ வசதிக்காகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை, தற்போது கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. அதற்குரிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தென்னக ரயில்வே உத்தரவின் அடிப்படையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் 105 படுக்கைகளைக் கொண்ட தனித்தனி அறைகளால் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பணி அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவடையும் என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
தென் தமிழ்நாட்டில், ஒரு ரயில்வே மருத்துவமனை கரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இதையும் படிங்க : லேசான கரோனா அறிகுறியா? - வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசு உத்தரவு!