மதுரை ரயில் நிலையத்தில் பயண சீட்டு பரிசோதகராக பணிபுரிபவர் எமில் ராபின் சிங். இவர் திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
இப்போட்டியில் வென்றதன் மூலம் ராபின் சிங் பெங்களூருவில் வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற இருக்கின்ற ஆசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சென்ற மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ரயில்வேக்களுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் பங்கு பெற்று நான்கு தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து வெற்றியுடன் திரும்பியுள்ள எமில் ராபின் சிங்கை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, மதுரை கோட்ட விளையாட்டுத் துறை அலுவலர் ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.