ETV Bharat / state

குற்றச் செயல்களை தடுக்க போலீசாருக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் - மதுரை ஆணையர் தொடங்கி வைப்பு - madurai two wheeler patrol

மதுரையில் குற்றச்செயல்களை தடுக்கவும், ரவுடி கும்பல்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் ரோந்து செல்ல வசதியாக இருசக்கர வாகனங்களை மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தொடங்கிவைத்தார்

madurai two wheeler patrol
குற்றச் செயல்களை தடுக்க போலீசாருக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள்- மதுரை கமிஷனர் தொடங்கி வைப்பு
author img

By

Published : Nov 27, 2020, 7:13 PM IST

மதுரை: மதுரையில் பழிக்குப்பழி சம்பவமாக கொலை, வெட்டு குத்து சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு உடனடியாக செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்களை மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று (நவம்பர் 27) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், "நகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் ரவுடிகளின் நடமாட்டத்தை குறைக்கவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நகர் முழுவதும் ரோந்து சொல்ல ஏதுவாக 67 இருசக்கர வாகனங்கள் பணியை மேற்கொள்ள உள்ளன.

madurai police commissioner sinha two wheeler patrol
கொடியசைத்து தொடங்கிவைத்த காவல் ஆணையர்

மக்களின் பார்வையில் படும் வண்ணம் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் பாதுகாப்பான முறையில் ஆயுத பிரயோகம் செய்யவும், தாமதமின்றி உரிய இடங்களுக்கு உடனடியாக செல்லவும் ரோந்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மதுரை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்கு பேருதவியாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.