தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிவேகமாக பரவிவரும் நிலையில், மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலையின்றி வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள் வறுமையில் வாடிவருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், ஏற்கனவே வழங்கியது போல் கூட்டுறவுத் துறை மூலம் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
கடந்த மாதம் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் நிவாரண நிதியாக 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதுரை அவனியாபுரம் பகுதியில் ரேசன் பொருள் வாங்க வரும் பயனாளிகள் தனி மனித இடைவெளி விட்டு, குடைப்பிடித்தும், ரேசன் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறிய எம்.எல்.ஏ.வுக்குப் பிணை!