ETV Bharat / state

பாலமேட்டில் 'தர்பார்' அமைத்த காளைகள் - சிறந்த வீரருக்கு கார் பரிசு

author img

By

Published : Jan 16, 2020, 8:26 PM IST

மதுரை: பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டில் சிறந்த வீரருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது,

palamedu jallikkattu
palamedu jallikkattu

மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் இன்றைய நாளில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நிறைவுற்றது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஒன்பது சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 669 காளைகளும், 675 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

மாடுபிடி வீரர்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஆர்ப்பரித்து உற்சாகப்படுத்தினர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் பங்கேற்று மிக ஆர்வத்துடன் காளைகளை பிடித்து விளையாட்டு காட்டினர். மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முயன்றாலும், பல காளைகள் காளையர்களை வாடிவாசலை விட்டு ஓட்டம் பிடிக்க வைத்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டு

நாகையில் கரும்பு விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை

அதிலும், முக்கியமாக வாடிவாசலில் தர்பார் அமைத்து காளைகளால், மாடுபிடி வீரர்கள் தலைதெறிக்க ஓடிய காட்சி பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தது. இந்நிலையில், அதிக காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு நாட்டு பசுமாடு, கன்றுக்குட்டி வழங்கப்பட்டது.

Intro:பாலமேட்டில் பட்டையை கிளப்பும் மாடுபிடி வீரர்கள்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுபிடி வீரர்கள் பட்டைய கிளப்பி வருகின்றனர்.
Body:பாலமேட்டில் பட்டையை கிளப்பும் மாடுபிடி வீரர்கள்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுபிடி வீரர்கள் பட்டைய கிளப்பி வருகின்றனர்.

மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் இன்றைய நாளில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பரித்து வருகின்றனர். காலை எட்டு முப்பதுக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் பிற்பகல் வரை ஐந்து சுற்றுகளை நிறைவு செய்துள்ளன.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் பங்கேற்று மிக ஆர்வத்துடன் காளைகளை பிடித்து வருகின்றனர். இதில் அய்யப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் ராஜா பதினொரு காலை கடைப்பிடித்து முதலிடத்தில் உள்ளார். அதேபோன்று பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற மாடுபிடி வீரர் 9 காளைகளை பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இன்னூம் மூன்றிலிருந்து நான்கு சுற்றுகள் நடைபெற உள்ள நிலையில் ஏறக்குறைய 400 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட உள்ளன. நேரம் செல்லச்செல்ல இளைஞர்களின் வேகமும் அதிகரித்து வருவதால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விறுவிறுப்படைந்து வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.