மதுரை: ஓஹா வாராந்திர சிறப்பு ரயில் சேவையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளிட்ட அறிக்கையில், “குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் வழியாக இயக்கப்படும் மதுரை - ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை, டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.
அதன்படி, ஓஹாவில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு மதுரை வந்து சேரும் ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (09520), ஜனவரி 1 முதல் ஜனவரி 29 வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில், மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.20 மணிக்கு ஓஹா சென்று சேரும் மதுரை - ஓஹா வாராந்திர சிறப்பு ரயில் (09519), ஜனவரி 5 முதல் பிப்ரவரி 2 வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாகை அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்!