கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் தடை இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டி தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க வசூல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடி மையம், எலியார்பத்தி பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடி மையம் ஆகியவற்றில் சுங்க வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டுச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தடையில்லாமல் சென்று வருகின்றன.
மேலும், மதுரை மாநகராட்சி சார்பில் உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரை சுமார் 27 கிலோ மீட்டருக்குள் அமையப்பெற்றுள்ள மஸ்தான் பட்டி, சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் சுங்ககட்டணம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்