ETV Bharat / state

விண்ணில் பாயத் தயாராகும் சந்திராயன் 3; இஸ்ரோவுக்கும் வாழ்த்து கூறிய மாணவர்கள்! - madurai news

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பாக நாளை (ஜூலை 14) நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான் 3 வெற்றி பெற மதுரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அஞ்சலட்டை மூலம் இஸ்ரோவுக்கும் வாழ்த்து தெரிவித்த மதுரைப் பள்ளி மாணவர்கள்

author img

By

Published : Jul 13, 2023, 10:48 PM IST

அஞ்சலட்டை மூலம் இஸ்ரோவுக்கும் வாழ்த்து தெரிவித்த மதுரைப் பள்ளி மாணவர்கள்..

மதுரை: நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாளை (ஜூலை 14) பிற்பகல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 3 விண்கலம் மூலமாக செயற்கைக் கோள்களை அனுப்ப உள்ளது. இந்தியா மட்டுமன்றி உலகமே ஆவலோடு இதனை எதிர்பார்த்துள்ள நிலையில், மதுரை மாநகர் மஞ்சணக்காரத் தெருவில் அமைந்துள்ள சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவியர் சந்திராயன் 3 விண்ணில் வெற்றிகரமாகச் செல்வதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அஞ்சல் அட்டை வாயிலாகவும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், நாளை பிற்பகல் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படவுள்ள காட்சியை தங்கள் பள்ளியின் ஸ்மார்ட் போர்டு மூலமாகக் கண்டு மகிழவிருக்கின்றனர். பள்ளியில் இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

மேலும், மாணவ - மாணவியரின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சந்திராயன் விண்கலத்தை பள்ளிச் சுவர் முழுவதும் வரைந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை உற்சாகமூட்டி வருகின்றனர். இதனையொட்டி நேற்று அப்பள்ளியின் மாணவ - மாணவியர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தங்களது வாழ்த்தைத் தெரிவிக்கும் வகையில் அஞ்சலட்டையை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் அஷ்ரஃப் கூறுகையில், “நாளை சந்திராயன்-3 விண்கலம் ஏவப்படவுள்ள நிலையில், எங்களது அறிவியல் மன்றத்தின் வாயிலாக விண்கலம் குறித்த ஓவியங்களை எங்கள் பள்ளி நிர்வாகம் வரைந்துள்ளது. அதுமட்டுமன்றி, எங்களது பள்ளி வளாகத்திலிருந்தவாறே நேரலையாக இதனைப் பார்வையிட உள்ளோம்.

ஏற்கனவே அஞ்சலட்டை மூலமாக இந்திய விஞ்ஞானிகளுக்கு நாங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளோம். அதில், சந்திராயன்-3 வெற்றியடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம். இந்திய நாட்டின் இந்த சாதனையை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நம்மால் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடியும். நமது இந்தியக் கொடியை நிலவில் காண முடியும்” என்றார்.

அதைத் தொடர்ந்து 7 ஆம் வகுப்பு மாணவி அல்ஃபிதா கூறுகையில், “எங்கள் பள்ளி வளாகத்திலிருந்து சந்திராயன்-3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுவதை ஸ்மார்ட் போர்டு வாயிலாக நாங்கள் நேரலையாகக் காண்பதற்கு பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் இனி மனிதர்களாகிய நாம் இறங்க முடியும்” என்றார்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன் கூறுகையில், “மாணவ - மாணவியருக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு ஏதுவாக இதுபோன்ற முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக மாணவ - மாணவியர் உருவாவதற்கான திறமையை அவர்கள் கைக்கொண்டுள்ளனர்.

அதனை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கம். பள்ளி வளாகத்தில் சந்திராயன்-3 மற்றும் அது சுமந்து செல்லும் லேண்டர், ரோவர் படங்களையும் வரைந்துள்ளோம். மேலும், மாணவர்களால் தயார் செய்யப்பட்ட அந்த படங்களை நாளை கண்காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். அதனை நாளை பிற்பகல் 2.35 மணிக்கு நேரலையாக ஒளிபரப்ப உள்ளோம்.

அடுத்த 40 நாட்கள் கழித்து நிலவில் இறங்கவுள்ள சந்திராயன்-3, நிச்சயமாக இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தரும். உலகிலேயே நான்காவது நாடு என்ற பெருமையையும் இதன் மூலம் இந்தியா பெறும். நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்த வெற்றி மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். வருங்காலத்தில் மனிதர்கள் மிக எளிதாக சந்திரனுக்குச் சென்று இறங்கக்கூடிய பெருமையையும் இந்தியா பெறும். இது நமது நாட்டிற்கே பெருமையாகும்.

இதன் மூலம் எங்களது பள்ளி மாணவ - மாணவியரும் அப்படியொரு நிலைக்கு உயர்வார்கள் என நம்புகிறேன். இதுபோன்ற முயற்சிகளுக்கு உறுதுணியாக இருக்கும் மதுரை மாநகர மேயர், துணை மேயர், ஆணையாளர், துணை ஆணையாளர், மாநகராட்சி பள்ளிக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இதுபோன்ற ஒத்துழைப்பை அவர்களிடமிருந்து பெறுவேன் என்ற நம்பிக்கையும் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: chandrayaan 3: உலகம் உற்றுநோக்கும் இந்திய சரித்திரம்.. சந்திராயன் - 3 குறித்த முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.