மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் திறப்பு, கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் நேற்று (ஜன 25) நடைபெற்றது.
அதில் ரொக்கமாக ஒரு கோடியே 51 லட்சத்து 41 ஆயிரத்து 196 ரூபாய், பலமாற்று பொன் இனங்கள் ஒரு கிலோ 120 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 3 கிலோ 540 கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 117 வரப்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், உண்டியல் திறப்பில் மதுரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், திருக்கோயில் உதவி ஆணையர் திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு மேலூர் ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் பஞ்ச கருட சேவை