ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்பத் திருவிழா - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தெப்பத் திருவிழா இன்று (ஜனவரி 7) கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய தெப்ப திருவிழா

author img

By

Published : Jan 7, 2022, 7:33 PM IST

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் ஆன்மிக முக்கியத்துவம் பெற்றவை. அந்த வகையில் இந்த ஆண்டு தை தெப்பத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு அமையப் பெற்ற அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் வேதமந்திரங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்கிட கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கொடி மரம் அருகில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளிய நிலையில் அவர்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கொடியேற்ற விழாவில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்பத் திருவிழா

விழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் சாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி.

மேலும், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை அதனுடன் வலைவீசி அருளிய லீலை போன்றவையும், தெப்பத் திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 16ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து 17ஆம் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவும் விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 18ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் விழாக்கள் அனைத்தும் கோயில் வளாகத்தில் மட்டும் நடைபெறுமா எனப் பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

தெப்பக்குளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரை காண பக்தர்கள் தவிப்பு

மேலும், நீர் நிரம்பியுள்ள பிரமாண்ட தெப்பத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் பவனிவரும் அழகைக் காண மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கூடும் நிலையில் இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அம்மனை தரிசிக்க முடியுமா என்கிற எதிர்பார்ப்பும் பக்தர்களிடையே உள்ளது.

இதையும் படிங்க: கடவுளை ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.