மதுரை: உற்சவ நாள்களில் சாயரட்சை பூஜைக்குப் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி, சுவாமி சன்னதியில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஏழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஊஞ்சல் கொண்டபின் மாணிக்கவாசகர் அருளிய திருப்பொன்னூஞ்சல் ஓதப்படும்.
அதன்பிறகு தீபாராதனை முடிந்து 2ஆம் பிரகாரம் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு மேல் வெள்ளியம்பல நடராஜருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகம், கால பூஜைகள் நடைபெற்று நாளை (ஜூலை 6) காலை 7 மணிக்கு மேல் நான்கு மாசி வீதிகளிலும் நடராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதையும் படிங்க : அமர்நீதி நாயனார் குருபூஜைக்கு வந்த கிளி: ஆச்சரியமாக பார்த்த பக்தர்கள்