தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் படுகொலை சம்பவத்தை கண்டித்து மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் நெடுஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பார்கவுன்சில் செயலாளர் மோகன் குமார் பேசுகையில், "சாத்தான்குளம் படுகொலையில் உயர் நீதிமன்றத்தால் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் பேரில் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். நீதிபதி சரவணனை பணி நீக்கம் செய்ய வேண்டும். விசாரணை குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பும் போது முறையான நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.
காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதுபோல் நீதிபதி சரவணன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா காலத்தில் பார் கவுன்சிலுக்கு 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும்" என்றார்.