காமராஜர் பல்கலை. பதிவாளர் தேர்வில் முறைகேடு - புதிய தேர்வை அறிவிக்கக் கோரிக்கை! - தேர்வு முறைகேடு
மதுரை: காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதால், துணைவேந்தர் புதிய தேர்வை அறிவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர், 'மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வில் 20 பேர் நேர்காணலுக்குத் தகுதியானவர்கள் என்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்வாகியுள்ள பேராசிரியர் கர்ண மகாராஜன், தேர்வாணையர் ரவி ஆகிய இருவர் மீதும் துறை ரிதீயான நடவடிக்கை நிலுவையில் உள்ளது. இதனடிப்படையில் இருவரது விண்ணப்பங்களையும் நிராகரிக்காமல் தேர்வு செய்தது சட்டவிரோதமானது.
மேலும், பதிவாளருக்கான நேர்காணல் தேர்வை காரணமேயின்றி இரு முறை ஒத்திவைத்துள்ளார்கள். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளிக்க வேண்டும். புதிய துணைவேந்தராக கிருஷ்ணன் பொறுப்பேற்றபோது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆனால் 10 மாதங்களாகியும் அவர் ஒரு நடவடிக்கையும் எடுத்ததாய் தெரியவில்லை. எந்த தவறு நடந்தாலும் அதை எதிர்த்து துணைவேந்தர் நடவடிக்கை எடுப்பதே இல்லை. இதனால் அவருடைய நிர்வாகத் திறமை மிகவும் மோசமாகவுள்ளது. இனியாவது மேற்கூறிய முறைகேடுகள் குறித்து அவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், புதிதாக பதிவாளர் தேர்வை அறிவித்து நேர்மையாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: ஜேப்பியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை...!
மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளரிடம் பேசுகையில்,
மதுரை காமராசர் பல்கலை பதிவாளர் தேர்வு வெளிப்படைத் தன்மையோடு நடத்த வேண்டும் நேர்மையாக நடத்த வேண்டும்,
பதிவாளர் காண விண்ணப்பத்தை பரிசீலித்து குழு அமைக்கப்பட்ட 20 பேராசிரியர்கள் அவரை தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்ட வேண்டும் இந்த பட்டியல் தயாரிப்பில் குளறுபடி நடந்துள்ளது,
பதிவாளர் தேர்வு பட்டியலில் உள்ள காமராஜர் பல்கலை தேர்வாணையர் ரவி மீது பணமோசடி கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது,
பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது,
இருவரையும் ரவி மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளார்,
துணைவேந்தராகப் பொறுப்பேற்று கிருஷ்ணன் 10 மாதங்களாகியும் பல் கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை முறையாகக் கையாளவில்லை,
நாட்டையே உலுக்கிய நிர்மலாதேவி வழக்கில் காவல் துறை குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப்பட் நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை இன்று வரை துணைவேந்தர் கிடைக்கவில்லை என்றார்.
Conclusion: