ETV Bharat / state

சொன்னது ஒன்னு... செய்தது ஒன்னு... - கண்ணீர் விடும் கல்லூரி மாணவர்கள் - கண்ணீர் விடும் கல்லூரி மாணவர்கள்

'குறைந்த கட்டணம் என்று சொல்லி சேர்க்கை நடத்திவிட்டு தற்போது கட்டணத்தை கடுமையாக உயர்த்திவிட்டார்கள். ஒரு கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல் நாள்தோறும் போராடுகிறோம்' என்று தங்களது குமுறலை வெளிப்படுத்துகின்றனர் மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்லூரி மாணவ, மாணவியர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காண்போம்....

கண்ணீர் விடும் கல்லூரி மாணவர்கள்
கண்ணீர் விடும் கல்லூரி மாணவர்கள்
author img

By

Published : Apr 6, 2022, 6:35 PM IST

மதுரை: தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களுள் ஒன்றுதான் ‘மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்’. 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பல்கலைக் கழகம் எண்ணற்ற கல்வியாளர்களையும், பேராசிரியர்களையும் தந்துள்ளது. தெ.பொ.மீ., மு.வ., வா.செ.குழந்தைசாமி, வ.சுப.மாணிக்கம் என பல்வேறு ஆளுமைகளைத் துணைவேந்தர்களாகக் கொண்ட பல்கலைக்கழகமாகும்.

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக பல்கலைக்கழகமே நேரடியாக கல்லூரி ஒன்றை அமைத்த பெருமை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தையே சாரும். அந்த வகையில், மதுரை - அழகர்கோவில் நெடுஞ்சாலையில் தல்லாகுளம் பகுதியில் இந்தக் கல்லூரி அமைந்துள்ளது.

ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் குறைந்த கல்விக் கட்டணத்துடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தென் மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் பல்கலைக் கழக கல்லூரியும் உருவானது.

இந்நிலையில், தற்போது இக்கல்லூரியின் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் இங்கு பயிலும், அடித்தட்டு, மாணவ, மாணவியர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈடிவி பாரத் ஊடகத்திற்காக அம்மாணவர்களைச் சந்தித்தோம்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். கல்லூரி சேரும்போது ஆண்டிற்கு 8 ஆயிரம் ரூபாய் என சொல்லி தற்போது செமஸ்டர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் என மாற்றிக் கூறுகிறார்கள் என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அடிப்படை வசதியின்றி தவிக்கும் மாணவர்கள்

பெரும்பாலும் இந்தக் கல்லூரியில் பயில்கின்ற மாணவ, மாணவியர் மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் பெரும்பாலானோர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியராவர். ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு மாணவ, மாணவியர் இங்கு வந்து பயில்கின்றனர். அரசு கல்லூரியைப் போன்றது என்று கூறி சேர்க்கை நடத்தியவர்கள் தற்போது, இல்லை... இல்லை... இதுவும் தனியார் கல்லூரியைப் போன்றதுதான் என்கிறார்கள்.

வகுப்பறைகளில் போதுமான மின் விசிறிகள் கிடையாது. சில துறைகளில் ஒரு வகுப்புக்கு 70 பேருக்கும் மேல் பயில்கின்றனர். இருக்கைகளும் மோசமான நிலையில் உள்ளன. ஒட்டுமொத்த கல்லூரியிலும் ஏறக்குறைய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து தரப்பப்படவில்லை. கல்லூரிக்குள் கேண்டின் வசதிகூட இல்லாத காரணத்தால், பல நேரங்களில் மாணவ, மாணவியர் கல்லூரியிலிருந்து மாவட்ட நீதிமன்றம் வரை நடந்தே சென்று உணவு உட்கொண்டு வருகின்றனர்.

சொன்னது ஒன்னு... செய்தது ஒன்னு...

இதுகுறித்து இளங்கலை பிபிஏ துறைப் பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவர் முருகேசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இந்தக் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் கடந்த 1994ஆம் ஆண்டு நேரடியாகத் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே முதல் முன்மாதிரிக் கல்லூரி இதுவாகும். தொடக்கத்தில் ஆயிரத்து 500 மாணவ, மாணவியரே இங்கு பயின்றனர். மதுரையில் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி நல்ல நோக்கத்துடனே ஆரம்பிக்கப்பட்டது. யுஜிசியின் ஒப்புதலோடுதான் தொடங்கப்பட்டது என்றாலும், இதுவரை இதற்குத் தேவையான நல்கையைப் பெற முடியவில்லை.

இங்கு பயிலும் மாணவர்களின் கட்டணத்திலிருந்துதான் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்றனர். தற்போது 10க்கும் மேற்பட்ட இளங்கலையும், 8க்கும் மேற்பட்ட முதுகலைப் படிப்புகளும் இங்குள்ளன. இங்கு பயில்வோரில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியராவர். இங்கு தற்போது விதிக்கப்பட்ட கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. ஆகையால் மாணவ, மாணவியர் அதனைக் கட்ட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் அனுப்பப்பட்டும்கூட இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் இல்லை” என்கிறார்.

வேதனை தெரிவிக்கும் மாணவர்கள்

காமராஜர் பெயரில் இயங்கும் கல்லூரிக்கு நேர்ந்த கொடுமை

மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பிறகு, காமராஜர் பல்கலைக் கழகம் சார்பாக மேலும் 6 உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவையனைத்தும் கடந்த அரசுக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்தக் கல்லூரி மட்டும் இன்னும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தக் கல்லூரியை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தினால் மட்டும்தான் இங்கு பயிலும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் காப்பாற்றப்படும். தற்போது இந்தக் கல்லூரியில் 28 நிரந்தர ஆசிரியர்களும், 100க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஆசிரியர்களும் பணியில் உள்ளனர்.

பேராசிரியரின் கோரிக்கை

இதுபோக தொகுப்பூதிய பணியாளர்களும் இங்கே பணியாற்றுகின்றனர். நிதி நெருக்கடி காரணமாக கடும் சிக்கலில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியை தமிழ்நாடு காப்பாற்ற வேண்டும். இதற்கு மதுரையிலுள்ள அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோரும் ஆவன செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எளிய மக்களுக்கும் கல்வி கிடைப்பதில் மிகுந்த அக்கறை காட்டியவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர். ஆனால், அவரது பெயரில் இயங்கும் இந்தக் கல்லூரி மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: 'என் காதலனுடன் பேசக்கூடாது' - சாலையில் சண்டை போட்ட கல்லூரி மாணவிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.