மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் தென் மாவட்ட மலர்ச்சந்தைக்குப் பெயர் பெற்றதாகும். மதுரை மட்டுமன்றி பிற மாவட்டங்களிலிருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
மதுரையின் அடையாளமாகத் திகழும் மதுரை மல்லி இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாகத் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பூ வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பூவின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மல்லி ரூ.400, முல்லை ரூ.400, பிச்சி ரூ.400, அரளி ரூ.250, சம்பங்கி ரூ.200, கோழிக்கொண்டை ரூ.50, செண்டுமல்லி ரூ.60, மரிக்கொழுந்து ரூ.70, கனகாம்பரம் ரூ.500 தாமரை ஒன்றுக்கு ரூ.10 என அனைத்துப் பூவும் மிக குறைவாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு