மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, மலர் வணிக வளாகம். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான், அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் விளையும் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை தமிழர்கள் வெகு சிறப்பாக கொண்டாடும் திருக்கார்த்திகை திருவிழா என்பதால், மதுரை மல்லிகை கிலோ ரூபாய் 1800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், முல்லை ரூ.800, பிச்சி ரூ.900, சம்பங்கி ரூ.100, மெட்ராஸ் மல்லி ரூ.700, அரளி ரூ.400, பட்டன் ரோஸ் ரூ 150, பன்னீர் ரோஸ் ரூ.250, செண்டுமல்லி ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வேகமாகப் பரவும் இன்புளூயன்சா ஃபுளூ.. இணை நோய் உள்ளவர்களுக்கு அதிக கவனம் தேவை.!