மதுரை : ஊரடங்கு காலத்தில் மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்த மதுரை மல்லிகை உள்ளிட்ட பிற மலர்களின் விலை, தற்போது பூக்களின் வரத்து குறைவு காரணமாக கணிசமான விலையேற்றத்தை சந்தித்துள்ளது.
விவசாய பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை
இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக மல்லிகை விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக கடும் விலை வீழ்ச்சியை மதுரை மல்லிகை சந்திக்க நேர்ந்தது.
கிலே ரூ.700க்கு விற்பனை
இந்நிலையில் பூக்களின் வரத்து மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தால் மதுரை மல்லிகை 700 ரூபாய்க்கு விற்பனையானது. இது கடந்த சில வாரங்களில் மிக அதிகபட்ச விலையாகும்.
மேலும் பட்டன் ரோஸ் ரூ.120, சம்பங்கி ரூ.150, அரளி ரூ.150, பிச்சிப்பூ ரூ.500, முல்லை ரூ.300 என பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது பொதுப் போக்குவரத்து தொடங்கியிருப்பதும் கோயில்கள் நடை திறக்கப்பட்டிருப்பதும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம்” என்றார்.
இதையும் படிங்க: அளவுக்கு அதிகமாக அலர்ஜி மாத்திரைகள் உட்கொண்ட பெண் உயிரிழப்பு!