மதுரை உசிலம்பட்டி சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டியிலிருந்து வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அந்த வேனில் இரண்டாயிரத்து 600 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேனில் மதுபாட்டில்களைக் கடத்திவந்த வேன் ஓட்டுநர் பொன்னுசிவா, அவரது நண்பர்களான ராகவன், கார்த்திகேயன், தினேஷ்குமார், செல்வகுமார், சரவணன் ஆகிய ஆறு பேரைக் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தனுஷ்கோடிக்கு கடத்திச்செல்லப்பட்ட 672 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது